Skip to main content
search

கூரை சூரிய ஆற்றல்

மீளுருவாக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) தற்போது உயர்ந்து வரும் ஆற்றல் நெருக்கடியையும் வெளிநாட்டு நாணயச் செலவுகளுடன் தொடர்புடைய சவால்களையும் எதிர்கொள்வதற்கான மிகச் செயல்திறன் மிக்க மற்றும் நிலையான தீர்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. பல்வேறு மீளுருவாக்கத்தக்க ஆற்றல் வழிகளில், கூரைச் சூரிய மின்சக்தி (Rooftop Solar Power) வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் எளிதில் அணுகக்கூடிய, செலவுச் சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான தீர்வாக தனித்துவம் பெறுகிறது.

சமீப ஆண்டுகளில், குறிப்பாக தேசிய மின் கட்டணங்கள் உயர்ந்ததைத் தொடர்ந்து, கூரைச் சூரிய மின்சக்தி தீர்வுகளுக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. மின் செலவுகள் அதிகரிக்கும் நிலையில், சூரிய மின்சக்தி மாதாந்திர மின் கட்டணங்களை கணிசமாக குறைக்க உதவும் நம்பகமான மாற்றுத் தீர்வாக அமைந்துள்ளது. சூரிய ஒளியிலிருந்து நேரடியாக தூய மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம், பயனாளர்கள் தங்களது நாளாந்த மின் தேவையின் பெரும்பகுதியை தேசிய மின்வலையமைப்பை மட்டும் சாராமல் பூர்த்தி செய்ய முடிகிறது. இது நீண்ட காலத்தில் செலவுச் சேமிப்பை வழங்குவதோடு, எதிர்கால மின் விலை மாற்றங்களிலிருந்து பயனாளர்களை பாதுகாக்கவும் உதவுகிறது.

நன்மைகள்

  • கணிசமான செலவுச் சேமிப்பு: மாதாந்திர மின்சாரக் கட்டணங்களை பெரிதளவில் குறைத்து, எதிர்கால மின் கட்டண உயர்வுகளிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.
  • சுற்றுச்சூழல் நட்பு: இயக்கத்தின் போது பசுமைக் குடில் வாயு வெளியீடுகள் எதுவும் இல்லாததால், உங்கள் கார்பன் தடயத்தை குறைத்து, தேசிய காலநிலை மாற்றத் தடுப்பு இலக்குகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
  • ஆற்றல் சுயாதீனம்: தேசிய மின் வலையமைப்பு மற்றும் இறக்குமதி செய்யப்படும் பாழாயுள் எரிபொருட்களின்மீது உள்ள சார்பை குறைத்து, நாட்டின் ஆற்றல் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.
  • மேம்பட்ட வசதி: அதிக மின்கட்டணத்துக்கான பயமின்றி, ஏர் கண்டிஷனிங் போன்ற நவீன மின்சார சாதனங்களை பயன்படுத்தி, மேலும் வசதியான வாழ்விடத்தை உருவாக்க முடியும்.
  • வருமானம் உருவாக்குதல்: அதிகப்படியான மின்சாரத்தை மின்வலையமைப்பிற்கு விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெறலாம்.
  • தரம் மற்றும் நம்பகத்தன்மை: AFC நிறுவனம் நம்பகமான வழங்குநர்களுடன் இணைந்து வழங்கும் உயர்தர சூரிய மின்சார அமைப்புகளைப் பெறும் வாய்ப்பு.

தகுதி

இந்த மாற்றத்தைக் ஆதரிக்கும் நோக்கில், AFC நிறுவனம் நம்பகமான சூரிய மின்சார தீர்வு வழங்குநர்களுடன் இணைந்து, எளிதாக அணுகக்கூடிய மற்றும் செலவுச் சிக்கனமான நிதி திட்டங்களை வழங்குகிறது. இந்த கூட்டாண்மைகள் மூலம், வாடிக்கையாளர்கள் உயர்தரமான சூரிய மின்சார அமைப்புகளைப் பெறுவதுடன், ஈர்க்கக்கூடிய நிதி நிபந்தனைகளையும் அனுபவிக்க முடிகிறது.

  • தஎளிதில் அணுகக்கூடிய நிதி உதவி: தூய ஆற்றலுக்கு மாற்றத்தை மேலும் எளிதாகவும் விரைவாகவும் செய்ய உருவாக்கப்பட்ட திட்டங்கள்.
  • அனைவரையும் உள்ளடக்கும் நிபந்தனைகள்: வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்ற செலவுச் சிக்கனமான தேர்வுகள்.
  • நீண்டகால முதலீடு: செலவைக் குறைக்கும் ஒரு தீர்வை, காலப்போக்கில் பலன் தரும் நிலையான முதலீடாக மாற்றும் வாய்ப்பு.

உங்களது கனவை நனவாக்கிக் கொள்வதற்காக மென்மேலும் மாற்றுவழிகள

உங்களது நானாவித தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எலாயன்ஸ் நிதி நிறுவனமானது பல்வேறு நிதித் தீர்வுகள் பலவற்றினை வழங்குகின்றது. மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருளை அழுத்தவும…

சந்தையில் வேகமாக ஏற்ற இறக்கமான வட்டி விகிதங்கள் காரணமாக, மேலே உள்ள வட்டி விகிதங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அதே புதுப்பித்த தேதியில் ஒரே மாதிரியாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.தற்போதைய வட்டி விகிதங்களுக்கு எங்களை 011 2 673 673 (Ext – 128,136,189,281,282,283) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

எலையன்ஸ் பைனான்ஸில், உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

உங்கள் கேள்விகளும் பின்னூட்டல்களும் எங்களுக்கு முக்கியம். எங்களை அழைக்கவும் அல்லது உங்கள் அனைத்து விசாரணைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒரு மின்னஞ்சலை விடுங்கள்.